Header Ads

“தேசத்தின் பொக்கிஷம்” பிரதமர் மஹிந்தவுக்கு புகழாரம்


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எமது தேசத்தின் பொக்கிஷமாவார் என பௌத்தாலோக மாவத்தை அதுல தஸ்ஸன விகாரை உள்ளிட்ட விகாரைகளின் விகாராதிபதி சிறி தம்மவங்ச மஹா நிகாயவின் அனுநாயக்கர் பொரள்ளே அதுல நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். 

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (30) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. 

அங்கு அனுசாசனம் நிகழ்த்திய போதே பொரள்ளே அதுல நாயக்க தேரர் இதனை தெரிவித்துள்ளார். 

இதன்போது, அவர் இறைவனின் ஆசீர்வாதத்துடன் ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கை வாழ பிரார்த்திப்பதாகவும், பிரதமரினால் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஆற்றலும் தைரியமும் அவருக்கு கிட்ட வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


No comments

Powered by Blogger.