முடிந்தால் செய்து காட்டுங்கள் - சஜித்துக்கு பகிரங்க சவால்
முடியுமாக இருந்தால் தூதுவர்களுடன் பேசி இலங்கைக்கு ஒரு தடுப்பூசியையேனும் கொண்டு வந்து காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வௌியிட்ட போதே இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இந்தச் சவாலை விடுத்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
மக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கும்படி ஜனாதிபதியும் பிரதமரும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கடந்த நாட்களில் எதிர்க்கட்சித் தலைவர் வௌிநாட்டுத் தூதுவர்களை சந்தித்ததை நாம் கண்டோம். தூதுவர்களை சந்திப்பது நல்லது. ஆனால் கெட்டதை சொல்வதற்கு அல்ல.
அதனால் எதிர்க்கட்சித் தலைவரிடம் நாம் கேட்கிறோம் - முடியுமாக இருந்தால் தூதுவர்களுடன் பேசி இலங்கை நாட்டுக்கு ஒரு தடுப்பூசியேனும் கொண்டு வந்து காட்டுமாறு" என ஜானக்க வக்கும்புர கூறியுள்ளார்.
No comments