முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு தமிழர்களிடம் சிங்கள தலைவர்கள் மன்னிப்புக் கோரவில்லை! நாடாளுமன்றத்தில் சிறீதரன் பேச்சு
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக்கோரவில்லை. அவ்வாறான சிங்களத் தலைவர்கள் எவரும் இல்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் எந்தவொரு சிங்கள தலைவரும் இதுவரை தமிழ் மக்களிடம் மன்னிப்புக்கோரவில்லை
அவ்வாறான சிங்களத் தலைவர்கள் எவரும் இல்லை. எனினும் இலங்கையில் இடம்பெற்றமை இன அழிப்பு என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவேதான் நீதிகோரி சர்வதேசத்திடம் தமிழர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
வரலாற்று ரீதியாக ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமும் நடைமுறை அரசாங்கமும் தமிழ் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். சிறில் மெத்யு, காமினி பொன்சேகா, லலித் அத்துலத்முதலி உட்பட்டவர்களும் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போன்றோரும் தமிழர்கள் ஒடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments