கர்ப்பிணிப் பெண்ணிடம் நடு வீதியில் குழந்தையை பிரசவிக்குமாறு கூறிய ஸ்ரீலங்கா பாதுகாப்பு படை!
நடு வீதியில் குழந்தையை பிரசவிக்குமாறு இளம் கர்ப்பிணித் தாயை்க்கு ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர் தெரிவித்த விடயம் காணொளியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் நெத்தலியாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற ஒரு இளம் கர்ப்பிணி தாய்க்கே படையினர் இவ்வாறு கூறியுள்ளனர்.
இன்றைய தினம் முல்லைத்தீவுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கர்ப்பிணிப் பெண் மாதாந்த கிளினிக் சென்றுள்ளார். இதன் போதே அவரை வழிமறித்து சோதனை செய்த படையினர் வைத்தியசாலைக்கு செல்லவிடாது தடுத்து இவ்வாறு அநாகரிகமாக பேசியுள்ளனர் என அங்கு நின்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.
தடை விதிக்கப்பட்டாலும் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் செல்லலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் இராணுவத் தளபதியும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையிலேயே இராணுவத்தினர் இவ்வாறு தெரிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments