அமெரிக்க தீர்மானத்தால் பஷில் ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
அமெரிக்காவுக்கு சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் நாடு திரும்பமுடியாத நிலைமை உருவாகியிருக்கின்றது.
இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவித்துள்ளதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தினமும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முக்கியஸ்தர்களுடன் இணையவழி கலந்துரையாடலை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவியான அனோமா ராஜபக்ஷவுக்கும் இதே நிலைமையே ஏற்பட்டுள்ளது. பஷில் ராஜபக்ஷ மற்றும் அனோமா ராஜபக்ஷ ஆகிய இருவருமே அமெரிக்கப் பிரஜாவுரிமையை கொண்டவர்கள்.
இதேவேளை, அமெரிக்கா இலங்கைக்கு எதிராக விதித்திருக்கின்ற 4ஆம் கட்ட பயணத்தடையானது சொற்ப நாட்களில் மாற்றம் பெறலாம் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments