Header Ads

இன்று முதல் தனியார் பேருந்து சேவைகுறைக்கப்படுகிறது


அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளின் சேவையை 25% ஆக குறைக்க இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன, பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டுள்ளதால் இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறினார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக தனியார் பேருந்துகள் 90% திறனில் சேவையை வழங்கியதாகவும், தற்போது பயணிகளின் வீழ்ச்சியால் 50% க்கும் குறைவான திறனிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார்.

பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புகளும் மூடப்பட்டிருக்கும் வேளையில் தனியார் மற்றும் அரசுத் துறையில் பல அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதால் பேருந்து சேவைகள் நாளை முதல் 25% ஆக குறைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறைந்த பயணிகள் காரணமாக எரிபொருள் செலவையே ஈடுசெய்ய முடியவில்லை என்று அவர் கூறினார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.