Header Ads

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடும் மோதல்!! சிறப்புத் தூதரை அனுப்பியது அமெரிக்கா


 இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை அமெரிக்க எடுத்துள்ளது.

கடந்த சில தினங்களாக இஸ்ரேலிய படையினருக்கும், பாலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்குமிமிடையில் உக்கிர மோதல் இடம்பெற்று வருகின்றது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கிடையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க சமாதான துாதுவர் ஒருவர் இஸ்ரேலின் ரெல் அவிவ் பகுதியைச் சென்றடைந்துள்ளார்.

அமெரிக்க துாதுவர் ஹடி ஆம்ர் இருதரப்புடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன் குறித்த பதற்றம் நிலவும் பகுதியில் நிலையான அமைதி ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வான் படை ஹாஸா பகுதியில் மேற்கொண்ட வான் குண்டுத் தாக்குதல் காரணமாக இன்றைய தினம் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் பாலஸ்தீனிய ஆயுதப் படையினர் இஸ்ரேலை நோக்கி எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த வாரம் இரு தரப்பிற்குமிடையில் இடம்பெற்ற வன்முறையானது 2014 ஆம் ஆண்டினையும் விட மோசமானது என தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் காரணமாக ஹாஸா பகுதியில் 136 பேரும், இஸ்ரேல் பகுதியில் 08 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருந்த நிலையில் மேற்கு பகுதி வரைக்கும் மோதல் பரவி விரிவடைந்துள்ளது

No comments

Powered by Blogger.