ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்துவது தொடர்பில் ஆலோசனை
நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்துவது தொடர்பில் ஜப்பான் அரசாங்கம் சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
எதிர்வரும் ஜீலை மாதம் ஜப்பானில் ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாகவுள்ளது. ஜப்பான் தலைநகர் டொக்கியோவில் கொரோன வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் மக்கள் ஒலிம்பிக் விளையாட்டு விழாவினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துவருகின்றன.
இந்த நிலையில் நாட்டு மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கொரோனா பரவலினால் பாரிய ஆபத்துக்களை மக்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் பிரதமர் யோசிகிடி சுகா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒலிம்பிக் விளையாட்டு விழாவினை இலகுவில் நிறுத்த முடியாது எனவும் அவ்வாறு நிகழும் பட்சத்தில் ஜப்பான் அரசாங்கம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நஸ்டஈடு வழங்க வேண்டும் என விளையாட்டு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments