விரைவில் அமைச்சர்களாகும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையில் மீண்டுமொரு தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையை கோட்டா-மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்கட்சியிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) சந்திப்புக்களை நடத்தியுள்ளார்
தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தராகிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, எதிர்கட்சியிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கடந்த வாரம் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
தனித்தனியே இந்த சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் பொதுஜன முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சிகளினால் தற்போது அரசாங்கத்திற்குள் பாரிய அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேதாஸ ராஜபக்ச, டிரான் அலஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்களும் அரசாங்கத்தின் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
அதேபோல முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மொட்டுக் கட்சிக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கான முடிவினை அறிவித்திருக்கின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கத்தை நடத்த பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து பயணிப்பதற்கான நோக்கில் பஸில் ராஜபக்சவினால் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments