Header Ads

இலங்கையில் மேலும் இரண்டு வாரத்திற்கு பயண தடை விதிக்க திட்டம்

 

அடுத்த இரு வாரத்திற்கும் முழு நேர பயண தடைகளை அமுல் படுத்துவது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

தற்போது அமுலில் உள்ள முழு நேர பயண தடையை தொடர்ந்து இரு வாரங்களுக்கு அமுல் படுத்துமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். மூன்று நாட்கள் தொடர் விடுமுறை தினங்களாக இருந்தமையால் , மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பயண தடையை அமுல் படுத்தினோம். அது நாளைய தினம் அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும்.

அதேநேரம் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு முழுவதும் பயண தடை இருக்கும். அத்துடன் , வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதற்காக அடையாள அட்டை நடைமுறையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும்.

எதிர்வரும் இரண்டு கிழமைக்கு தொடர் முழு நேர பயண தடை விதிப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை. இன்றைய தினம் அது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.