பயணத்தடைக்கு மத்தியில் வீடுகளுக்கே மீன்கள்
பயணத்தடை அல்லது முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று மீன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மீன்பிடி கூட்டுதாபனத்துக்கு மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய எந்தவொரு பிரதேசத்திலும் பயணத்தடைகள் விதிக்கப்பட்டு அல்லது முடக்கப்பட்டிருக்குமாயின், அசௌகரியம் இன்றி, சாதாரண விலைக்கு உரிய தரத்துடன் சுகாதார பாதுகாப்புகளுடன் மீனை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகரவின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்காக மீன்பிடி கூட்டுதாபனத்தின் நடமாடும் பிரிவு வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீன்பிடி கூட்டுதாபனத்தின் Ceyfish வர்த்தக நாமத்தின் கீழ்,வழங்கப்படும் நேரடி தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்புகொள்ளும் நுகர்வோர் தமக்கு தேவையான மீன் உள்ளிட்டவைகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments