Header Ads

அதிமுக, திமுகவுக்கு பயத்தை காட்டிய சீமான்!

 


தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரங்களை பார்க்கலாம். தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது திமுக. முதல்வராக ஸ்டாலின் மே 7ம் தேதி பதவியேற்க உள்ளார்.

இதில் கட்சிகள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை, வாக்கு சதவிகிதத்தை பார்க்கலாம்.

திமுக கூட்டணி – 159 இடங்களில் வென்றுள்ளது. திமுக – 125, காங்கிரஸ் – 18, விசிக – 4, மதிமுக – 4, சிபிஎம் – 2, சிபிஐ – 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.ம.க உள்ளிட்ட இதர கட்சிகள் – 4 இடங்களில் வென்றுள்ளது.

அதிமுக கூட்டணி – 75 இடங்களில் வென்றுள்ளது. அதில்… அதிமுக – 65, பாமக – 5, பாஜக – 4 இதர கட்சிகள் – 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.  

மநீம+, நாம் தமிழர், அமமுக+ – எங்கும் முன்னிலை, வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 234 இடங்களில் 118 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் திமுக கூட்டணி 159 இடங்களில் ஜெயித்து ஆட்சி அமைக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக, அதிமுக மற்றும் இதர காட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதங்கள் என்று பார்த்தால்… திமுக – 37.15%, அதிமுக – 33.28%, காங்கிரஸ் – 4.28%, பா.ம.க- 3.81%, இந்திய கம்யூனிஸ்ட் – 1.09%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 0.85%, தேமுதிக – 0.43%, பாஜக – 2.63%, விசிக- 1.3%, முஸ்லிம் லீக்- 0.48%, மக்கள் நீதி மய்யம் 2.4%, நாம் தமிழர் கட்சி 6.6%, அமமுக 2.4% வாங்கியுள்ளது.

இதில் இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் ட்விஸ்ட் என்னன்னா? தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்ததாக நாம் தமிழர் கட்சி பல இடங்களில் 3 வது இடம் பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சி தான் பல தொகுதிகளில் 3 வது இடம் பிடித்ததுள்ளது. வாக்கு சதவிகித ரீதியாக பார்த்தால் நாம் தமிழர் 3வது பெரிய கட்சியாக வாய்ப்புள்ளது.

அதேபோல, அமமுக, மநீம ஆகிய கட்சிகளும் பல தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு டஃப் பைட் கொடுத்துள்ளது. அதே சமயத்தில் கொங்கு மண்டலத்தில் மநீம கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.   

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.