ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது! முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சீற்றம்
நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அரசியல்வாதிகள் தலையீடு செய்து தீர்மானங்களை மேற்கொள்ளும் விடயமானது இலங்கையில் காலங்காலமாக நீடிக்கும் பாரதூரமான பிரச்சினையாக காணப்படுவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள அபயராமய விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசம் அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டுடன் விடுவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.
மேலும் விமர்சனம் வெளியிட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,
நாட்டில் தொடர்ச்சியாக காணப்படும் பிரச்சினையே இது. ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அதில் அரசியல்வாதிகள் தலையீடு செய்வது நாட்டின் மீதான அக்கறையில் அல்ல. அது அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கினை மேலும் வளர்த்துக்கொள்வதற்காகவே இவ்வாறு செய்கின்றார்கள்.
அரசியல்வாதிகளா பொது மக்களா எனப் பார்த்து கொரோனா தொற்று பரவாது. ஆகவே சுகாதார கட்டுப்பாடுகளில் தலையீடு செய்வது நியாயமான விடயமாக அமையாது. இதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இதற்கென நியமிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்களே இந்த விடயத்தைக் கையாள வேண்டும்.
கொரோனாவுடன் இணைந்ததாக பல வியாபாரங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
எமது மக்களுக்கே சுகாதார சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில், இந்தியர்களை இந்த நாட்டிற்கு வரவழைப்பது தொடர்பில் பேசுவார்கள் எனின் அவர்களின் மூளையை பரிசோதிக்க அங்கொடை பிரதேசத்திற்குத்தான் அனுப்ப வேண்டும் என்றார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments