Header Ads

நாளை வெளியாகிறது தமிழக தேர்தல் முடிவுகள்; பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்


நாளை தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இன்று மாலை 3 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் துறையினருக்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு யார் யாருக்கு எந்தெந்த வாக்கு எண்ணும் மையங்களில் பணி என்பது குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் துறையினருக்கான பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற இந்த ஒத்திகையில் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

வாக்கு எண்ணிக்கை நாளான நாளை அதிகாலை 5 மணியிலிருந்து பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இன்று கடைசி நாள் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட காவல்துறையினருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

இதேவேளை தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை உச்சகட்ட பாதுகாப்புடன் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

👇👇👇👇👇👇👇👇👇👇 




No comments

Powered by Blogger.