உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ரவூப் ஹக்கீம் முன்வைத்த கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவும் இருந்துள்ளதாகவும் இது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்து எனது உரையின்போது இதற்கு முன்னரும் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளேன். இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு இதன் பின்னணியில் இருந்துள்ளது என்பதற்கான தகவல்கள் உள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது பற்றியும் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, இளம் முஸ்லிம் கவிஞர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சர்வதேச அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் இதன்போது குறிப்பிட்டார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments