Header Ads

இஷ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு


இஷ்ரேலில் உள்ள இலங்கையர்கள் அனைவரையும் விழிப்புடன் இருக்குமாறும், பெரிய கூட்டங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களையும் தவிர்க்குமாறும் டெல் அவிலில் (Tel Aviv) உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான கலவரங்கள் மற்றும் மோதல்களால் அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீவிர அவசரநிலை ஏற்பட்டால் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிக்கும் பொருட்டு தூதரகம் துரித எண்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலங்கையர்கள் கே.பி. சந்திரதிலகே - 058 6875764 அல்லது இண்டிகா சேனரத்ன - தொழிலாளர் மற்றும் நலன்புரி 055 9284399 ஆகிய எண்களுடன் தொடர்புகொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.