Header Ads

ஈஸ்டர் தாக்குதல் : சர்வதேச விசாரணை வேண்டும்

அரசாங்கம் நிரபராதியென்றால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷமன் கிரியெல்ல, பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்படுவது இலங்கைக்கு வெட்கக்கேடான ஒன்றெனவும் தெரிவித்தார்.

நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், கட்டளைகள் மீதான நேற்றைய (18) பாராளுமன்ற  விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர், “மாகந்துர மதுஷ் உள்ளிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 7 பேர் இதுவரையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், இதுபோல கைது செய்யப்பட்ட எவரும் கொலை செய்யப்படவில்லை. சிங்கள பௌத்த நாடு என்ற வகையில், இலங்கைக்கு இது வெட்கக்கேடான ஒன்று” என்றார்.

“இது பாரிய வெட்கம். சர்வதேசத்தில் இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இதுவொரு மற்றொரு பிரச்சினையாகக் காணப்படும். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், போதுமான சாட்சியங்கள் இல்லை எனச் சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்” என்றார்.

சாட்சியங்கள் இல்லாது எவருக்கு எதிராகவும் வழக்குத் தொடரமுடியாது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு, சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியது யாரென விசாரிக்கவில்லை.

“பயங்கரவாதிகள் புலனாய்வுத் துறையினருடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதி இங்கு இருக்கிறார். நிலந்த ஜயவர்தனவுக்கு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறவில்லை என, ஆணைக்குழு முன்பாக மைத்திரி சாட்சியம் வழங்கியுள்ளார்” என்றார்.

பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாலேயே நிலந்த ஜயவர்தன இதனை மைத்திரியிடம் கூறவில்லை எனவும் தெரிவித்த லக்ஷமன் கிரியெல்ல, இதுபோன்ற புலனாய்வுத் துறையை வைத்துக்கொண்டு விசாரணைகளை நிறைவுசெய்ய முடியாதெனவும் தெரிவித்தார்.

அரசாங்கம் நிரபராதியென்றால், சர்வதேச புலனாய்வாளர்களான எப்.பி.ஐ, ஸ்கொட்லேன்ட்டை நாட்டுக்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென தான் கோரிக்​கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



 

No comments

Powered by Blogger.