1 மில்லியன் தொற்றாளர்கள் உருவாகலாம்
தற்போது நாட்டில் கண்டறியப்பட்டு வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஒரு மில்லியன் தொற்றாளர்கள் கண்டறியப்பட வாய்ப்புள்ளதாக, சுகாதாரச் சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
9ஆவது நாளாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டகொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் காணப்படும் ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், அந்தத் தொழிற்சாலைகளுக்கு ஊழியர்கள் அழைத்துச் சென்று வருவது ஆபத்துக்குரியதென, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments