கொவிட் தடுப்பூசி கேட்டு ஜனாதிபதி கடிதம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு கொங்கோ அரசாங்கத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருக்கின்றார்.
இது தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, மேலதிகமாக உள்ள எஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார். இந்தக் கடிதப்பரிமாற்றம் கொங்கோ அரசின் கொழும்பிலுள்ள தூதரகம் மூலமாக இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடிதத்தை வழங்க ஜனாதிபதியே தூதரகத்திற்கு நேரடியாக சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது நாட்டு மக்களுக்கு கொங்கோ அரசாங்கம் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசி அளிப்பதற்காக பெற்றுக்கொண்ட தடுப்பூசித் தொகையை விட மேலதிகமாக தடுப்பூசி எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தடுப்பூசி கேட்டு ஏற்கனவே அரசாங்கம் கடிதம் அனுப்பிவைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments