Header Ads

இலங்கையில் 5 நாட்களில் 100க்கும் அதிகமான கொவிட் மரணங்கள்! ஒப்பீட்டளவில் பெரும் கவலை




 இலங்கையில் 5 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 9ஆம் திகதி நாட்டில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 800ஐ கடந்து 801 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 120 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியதுடன், மரணங்களின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.

10ஆம் திகதி 26 மரணங்களும், 11ஆம் திகதி 23 மரணங்களும், 12ஆம் திகதி 18 மரணங்களும், 13ஆம் திகதி 24 மரணங்களும், நேற்றைய நாளில் 29 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 921 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, இலங்கையின் கொவிட்-19 மரணங்களின் சதவீதமானது, 0.67 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச கொவிட்-19 மரணங்களின் சதவீதம் 2.07 ஆக பதிவாகியுள்ளது. உலகளவில் பிரேஸிலில் கொவிட் மரணங்களின் சதவீதம் அதிகமாகும். 2.79 சதவீதமாக பிரேஸிலில் கொவிட் மரணங்கள் பதிவாகின்றன.

பிரான்ஸில் 1.84 சதவீதமாகவும், அமெரிக்காவில் 1.78 சதவீதமாகவும், இந்தியாவில் 1.09 சதவீதமாகவும் கொவிட்-19 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கொவிட்-19 தரவுதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகமாக உள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்த மக்களும் தமது ஒத்துளைப்பை வழங்குவது காலத்தின் கட்டாயம் என வைத்தியர் ஒருவர் குறிப்பிட்டார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.