இலங்கையில் மற்றுமொரு கர்ப்பிணி தாய் கொரோனாவுக்கு பலி; விருந்துபசாரத்தால் ஏற்பட்ட விபரீதம்
இலங்கையில் கொரோனா தொற்றினால் மற்றுமொரு கர்ப்பிணி தாயொருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் உடல், தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கமைய, நேற்று மாலை தடல்ல தகனசாலையில் அடக்கம் செய்யப்பட்டதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர், அக்குரஸ்ஸ, வில்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான பெண் ஆவார். இப்பெண், தான் முதல் தடவையாக கருவுற்றதை கொண்டாடுவதற்காக கடந்த புத்தாண்டு தினத்தில் அவரது வீட்டில் விருந்துபசார நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதில் அதிகளவானோர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர் தனது பணி இடத்துக்கு சென்றிருந்தபோது, அவரது தாயாருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த கர்ப்பிணிக்கும் பீசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக இப்பெண் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சுவாசக்கோளாறு ஏற்பட்டதால் உடனடியாக எக்மோ சிகிச்சைகளுக்காக கடந்த 29 ஆம் திகதி அவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குறித்த பெண் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கருவில் உள்ளபோதே உயிரிழந்த குறைமாத சிசுவை நேற்று முன்தினம் பிரசவித்தபின்னர் அவரும் உயிரிழந்தார்.
இதேவேளை பெண்ணின் வீட்டில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments