இலங்கையில் நாளைய தினம் விமான நிலையங்கள் திறப்பு
இலங்கையில் கோவிட் தொற்று தீவிரமடைந்ததையடுத்து நாட்டிற்குள் வெளிநாட்டு பயணிகள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 21ஆம் திகதி குறித்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் நாளைய தினம் முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி நாளை முதல் வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை வரும் விமானமொன்றில் வரக்கூடிய ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments