Header Ads

இலங்கை குழாமில் இணைக்கப்பட்ட புதிய வீரர்களுக்கு கொரோனா!


இலங்கை கிரிக்கெட் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்ட புதுமுக வீரர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்ட தனஞ்சய லக்சான் மற்றும் இஷான் ஜயரட்ண ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், பங்களாதேஷ் அணியுடனான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரம் தெரிவிக்கின்றது. இவர்கள் இருவரும் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுவருகின்றனர்.

எனினும், புதுமுக வீரரான ஷிரான் பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பங்கேளாதேஷ் அணியுடனான இலங்கை கிரிக்கெட் குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ் பயணிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 8 ஆம் திகதியன்று ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளபோதிலும், ஷிரான் பெர்னாண்டோவுக்கு மேற்கூறிய தடுப்பூசி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஷிரான் பெர்னாண்டோ கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததன் பின்னர், அவருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரம் தெரிவிக்கிறது.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.