அவசரமாக அமெரிக்காவுக்கு பறந்தார் பஷில் ராஜபக்ஷ!
பொருளாதார புத்துயிர் மற்றும் வறுமையொழிப்பு பற்றிய ஜனாதிபதி செயலணியின் தலைவரான முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
அவசரமாக பெற்றுக்கொள்ள வேண்டிய மருத்துவத் தேவைக்காகவே அவர் அமெரிக்கா பயணமானதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செப்டம்பர் மாதமும் அதேபோல கடந்த ஏப்ரல் மாதத்திலும் பஸில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
எனினும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பயணத்தை இரத்து செய்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவுக்குச் சென்றுள்ள பஷில் ராஜபக்ஷ, அங்கு ஒருமாதம் வரை தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகின்றது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments