பொதுமன்னிப்பு கோரும் கடிதத்தில் கையெழுத்திட்ட ரஞ்சன்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொது மன்னிப்பு கோரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ரஞ்சன் கையெழுத்திட்ட கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சட்டத்தரணி ஆஷான் பெர்னாண்டோ நேற்று (03) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்தார்.
இந்த ஆவணங்களை ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது. ரஞ்சனிற்கு மன்னிப்பு வழங்கும்படி ஜனாதிபதியிடம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தொலைபேசியில் கோரியிருந்தார்.
இதற்கான ஆவணங்களை முறைப்படி சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கேட்டிருந்தார். இதன்படி, பொதுமன்னிப்பு கோரும் கடிதத்தில் ரஞ்சன் ராமநாயக்க கையெழுத்திட்டுள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments