தப்பிச்சென்ற கொரோனா கைதி தொடர்பில் வெளியான தகவல்!
கொரோனா வைரஸ் பரவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தப்பிச்சென்ற கைதி சரணடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் சிறைச்சாலைகள் தலைமையகத்தை தொடர்புக் கொண்டு சரணடைவதாக தெரிவித்ததன் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளும் , பொலிஸாரும் இணைந்து அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கொரோனா வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்டதை அடுத்து , பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் போது , சிறைச்சாலை பேரூந்திலிருந்து தப்பிச் சென்ற கைதி சிறைச்சாலைகள் தலைமையகத்தை தொடர்புக் கொண்டு சரணடைவதாக தெரிவித்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை பகுதியில் இருந்த கைதியை சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அழைத்து வந்ததுடன். அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments