Header Ads

கோவிட் 19 தடுப்பூசி மையங்களுக்கு இராணுவத் தளபதி திடீர் விஜயம்


அரசாங்கத்தின் அறிவறுத்தலுக்கமைய இராணுவத்தினரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கோவிட் – 19 தடுப்பூசி மையங்களுக்கு திடீர் விஜயம் செய்து இராணுவ தளபதியும் கோவிட் – தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா ஆய்வு செய்தார்.

19 தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் தெற்கு, வடகிழக்கு, வட மத்திய மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. காலி, மாத்தறை, மாத்தளை, குருணாகலை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் கோவிட் – 19 பரவும் அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு இந்தப் பகுதிகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி ஸ்ரீ சுதர்மாராமய, ஹபராதுவ, படுவன்ஹெனா, எல்பிட்டிய மற்றும் கட்டுகுறுந்த தார்மிக்க வித்தியாலயம் ஆகிய இடங்களில் படையினரின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் பகுதிகளுக்கு முன் அறிவிப்பின்றி கண்காணிப்பு விஜயமொன்றை இராணுவத் தளபதி நேற்று மேற்கொண்டிருந்தார்.

அவ்விடத்தில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய குருணாகலை,காலி, மாத்தறை, ஆகிய மூன்று மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கப்பெற்ற 500,000 தடுப்பூசிகளை வழங்குவதற்காக சுகாதார துறையினருடன் படையினரும் கைகோர்த்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இராணுவ வைத்திய அதிகாரிகள் மற்றும் படையினர் ஹபராதுவவிலுள்ள கட்டுகுறுந்த தார்மிக்க வித்தியாலயம் இம்புல்கோட்டவிலுள்ள ஸ்ரீ தர்மோதாராமய, ரத்கம, படுவன்ஹேனவிலுள்ள ஸ்ரீ சுதர்மாராமய, எல்பிட்டிய, (காலி மாவட்டம்) ஸ்ரீ சுதர்ஷனாராம, பன்னல் மற்றும் குளியாபிட்டிய (குருணாகல் மாவட்டம்) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் (மாத்தளை மாவட்டம்), தம்புத்தேக பொருளாதார மத்திய நிலையம் (அநுராதபுரம்) ஆகிய பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கோவிட் - 19 வைர்ஸ் தடுப்பூசியை ஏற்றுதலை தேசிய பொறுப்பென கருதி சில வாரங்களுக்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய நகர்புற பகுதிகளில் அரசாங்கத்தால் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவ வைத்திய படையினர், சேவை வனிதையர் பிரிவினருடன் இணைந்து கோவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அனுசரணையுடன், கோட்டை மொறடுவை, வௌ்ளவத்தை, தெமட்டகொடை, முகத்துவாரம், கொட்டாவ, கொழும்பு, பிலியந்தல மற்றும் கொரகாபிட்டிய, பகுதிகளில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவைகளை முன்னெடுத்ததுடன் ஏனைய தடுப்பூசியேற்றும் நிலையங்கள் சுகாதார திணைக்களம் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் நிலையங்களால் முன்னெடுக்கப்பட்டன.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.