Header Ads

சூழ்ச்சிகளுக்குள் சிக்கப்போகும் இலங்கை - பின்னணியை வெளியிட்ட சரத் பொன்சேகா

கொழும்பு துறைமுக நகர திட்டம் எமது நாட்டினை மிஞ்சிய ஒன்றாக அமையும். அது நேரடியாக இலங்கையை பாதிக்கும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நிறைவேற்றப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார் இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

யுத்தத்தால் மாத்திரம் ஒரு நாட்டின் பூமியை ஆக்கிரமிக்க முடியாது, இன்றைய சூழ்நிலையில் நிலம் மாத்திரம் அல்ல, இறையாண்மை, சுயாதீனத் தன்மைக்கும் பாதிப்புகள் ஏற்படும் பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதில் பொருளாதார ரீதியில் நாட்டினை வீழ்த்தி, கடன்களில் நெருக்கி அதன் மூலமாக நாட்டினை முழுமையாக ஆக்கிரமிக்கும் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களிலும் இந்த சூழ்ச்சி திட்டங்கள் பல்வேறு நாடுகளில் இடம்பெற்றுள்ளன. இன்று எமக்கும் அவ்வாறான நிலையொன்று ஏற்படும் சூழல் காணப்படுகின்றது.

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் ஆரம்பத்தில் அரசாங்கம் முன்வைத்த சட்டமூலத்தில் பல விடயங்களில் எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாத நிலை இருந்தது. நீதிமன்றத்தை நாடி காரணிகளை கூறினோம். இவற்றில் 25 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும் திருத்தங்கள் செய்தாலும் எம்மால் அங்கீகரிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

அதற்கு காரணம் என்னவெனில் பிரதானமாக மாற்றங்களை செய்ய வேண்டும் என நாம் வலியுறுத்திய காரணிகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

குறிப்பாக பொருளாதார ஆணைக்குழுவின் நியமன விடயங்களில் ஜனாதிபதியின் தனித் தீர்மானங்களுக்கு அமைய நாட்டுக்கு பொருந்தாத தீர்மானங்கள் எடுக்கப்படலாம். எனவே இதனை பாராளுமன்ற அதிகாரத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் நாம் துறைமுக நகர் திட்டத்தை நிராகரிக்கின்றோம் என அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறான திட்டங்களை நாம் சரியாக கையாண்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மையளிக்கும். ஆனால் துறைமுக நகரை இலங்கை எவ்வாறு கையாள்கின்றது என்பதில் முரண்பாடுகள் உள்ளன.

99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு நிலத்தை குத்தகைக்கு கொடுப்பதில் இலங்கை பெற்றுக்கொள்ளப்போகும் நன்மைகள் என்ன? நாமும் அதிகளவில் நிதி செலவழித்துள்ளோம். அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம், வீதி புனரமைப்பு போன்றவை இலங்கை அரசாங்கத்தினால் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

எனவே எமக்கும் இதில் அதிகளவு பங்கு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அதேபோல் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் இந்த சூழ்நிலையில் கொண்டுவந்து நிறைவேற்றும் நேரம் அல்ல. நாடாக சகலரும் பாதிக்கப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் சீனாவை திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

உலக நாடுகளும் இப்போது எம்மை பார்த்துக்கொண்டுள்ள நிலையில் நாம் எடுக்கும் தீர்மானங்கள் அவசர அவசரமாக இருக்கக்கூடாது என்றே கருதுகிறோம். சீனாவுக்கு ஏற்ற விதத்திலேயே இன்றுவரை துறைமுக நகர் திட்டம் கையாளப்படுகின்றது.

இந்த நிலப்பரப்பில் கட்டியெழுப்படும் பொருளாதாரம் எமது நாட்டினை மிஞ்சிய ஒன்றாக அமையும். அது நேரடியாக இலங்கையை பாதிக்கும் என அவர் கூறினார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



 

No comments

Powered by Blogger.