கம்பஹாவில் ஒரேநாளில் 761 பேருக்கு கொரோனா
இலங்கையில் நேற்றையதினம் 3 ஆயிரத்து 623 கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, அங்கு 761 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் அதிகமாக திவுலபிட்டியில் 101 நோயாளர்களும், கடவத்தையில் 100 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
அதேநேரம், களுத்துறை மாவட்டத்திலும் அதிகளவான நோயாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர். அதன்படி, அங்கு 493 நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அவர்களில் அதிகமாக 263 நோயாளிகள் பாணந்துறை தெற்கு பகுதியில் பதிவாகியுள்ளனர்.
இதுதவிர, கொழும்பு, குருநாகல், காலி, யாழ்ப்பாணம் மற்றும் கேகாலை மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் கொரோனா வைரஸைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments