24 மணித்தியாலயத்திற்குள் 10 பேர் உயிரிழப்பு
இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் வீதி விபத்துக்களால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பேர் ஏற்கனவே இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பதுடன் , ஏனைய நால்வரும் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டி உள்ளிட்டவற்றில் பயணிப்போரும் , பாதசாரதிகளுமே வீதி விபத்துகளினால் பெரிதும் பாதிப்படைவதனால் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
மதுபோதை மற்றும் போதைப் பொருட்களை பாவனையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments