200 கர்ப்பிணிகளுக்கு கொரோனா
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 200 கர்ப்பிணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான கர்ப்பிணிகளை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, போதனா வைத்தியசாலைகள், ஆதார வைத்தியசாலைகளில், தனித்தனியே வார்ட்டுகளை உருவாக்கி சிகிச்சையளிக்குமாறு, சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில், மேற்படி வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு, சுகாதார அமைச்சினால் சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுவது தொடர்பிலும் சுகாதாரத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதுடன், அது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments