Header Ads

கைதிகளுக்கு கிடைத்த 15 நிமிட வாய்ப்பு


சிறையிலிருக்கும் கைதிகளுடன் அவர்களது உறவினர்கள் வீடியோ தொழிநுட்பம் ஊடாக தொடர்பை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் மீண்டும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளை உறவினர்கள் பார்வையிடும் நடவடிக்கையானது, கொரோனா பரவலையடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், குறித்த வீடியோ தொழிநுட்ப வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷhர உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சிறைச்சாலை திணைக்களத்தின் www.prisons.gov.lk என்ற இணைய முகவரிக்குள் பிரவேசித்து, தம்மை பதிவு செய்துகொள்பவர்கள், சிறையில் இருக்கும் கைதிகளுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்றார்

இவ்வாறு வீடியோ தொழிநுட்பம் ஊடாக கதைப்பதற்கு, வாரத்துக்கு 15 நிமிடங்கள் கைதியொருவருக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.