Header Ads

அம்பாறையில் 1,000ஐ தொடும் தொற்று


கொரோனாவின் 3ஆவது அலையின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் 3,000ஐ அண்மித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் 1,000 தை தொடும் நிலையில் உயர்வடைந்துள்ளமை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரத் தகவல்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 941ஆக அதிகரித்துள்ளதுடன், கல்முனை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்வடைந்துள்ளது.

அம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் எழுந்தமானமாக பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் ஆலோசனையின் பிரகாரம், அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள், பொலிஸார் உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்பில் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.