ஆபத்தான இடமாக கொழும்பு - விடுக்கப்பட்டது எச்சரிக்கை
நாட்டின் 22 மாவட்டங்களில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காணப்படுவதாகவும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தல தலங்கம, கோட்டே,கொட்டாவ மற்றும் மொரட்டுவை பகுதிகளிலேயே நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, புத்தாண்டு காலம் வரையிலும் பொதுமக்கள் சிறப்பான முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாவும், புத்தாண்டு காலத்தில் அதனை கடைப்பிடிக்க தவறிவிட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
மேலும் முகக்கவசம் மற்றும் சுகாதார விதிகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
No comments