இலங்கையில் சீனத் தடுப்பூசிகள் இன்று முதல் பாவனைக்கு!
இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்னர் கூறியதைப்போன்று இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து 6 இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த வாரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
இதேவேளை இலங்கை மக்களுக்கு இந்த தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து விசேட நிபுணர் குழுவினால், ஆராயப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும் இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம், தேசிய மருந்துகள் கட்டுபாட்டு அதிகாரசபை மற்றும் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழு என்பன அனுமதி வழங்காத நிலையில், அதனை மக்களுக்கு செலுத்த வேண்டாம் என எதிர்க்கட்சியினர் உட்பட பலர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments