Header Ads

சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் – சுதத் சமரவீர


சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்றாலும் இது மூன்றாவது அலையின் தோற்றமாக கருத முடியாது என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்தமையை சுட்டிக்காட்டிய அவர், அது மற்றொரு அலையின் அவசரநிலை என கருத முடியாது என்றும் கூறினார்.

கிறிஸ்மஸ் காலத்தில் அதிகரித்த பொது மக்கள் நடமாட்டம் பல புதிய கொத்தணிகள் உருவாக்க காரணமாக அமைந்தது என குறிப்பிட்ட வைத்தியர் சுதத் சமரவீர, புதுவருடப்பிறப்பிக்கு பின்னர் இதை எதிர்பார்க்கலாம் என்றார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் தொற்றுகள் பதிவாகியிருப்பதே ஒரு நாளைக்கு 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட காரணம் என்றும் குறிப்பிட்டார்.

இவர்களில் சமூக அளவில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு என குறிப்பிட்ட வைத்தியர் சுதத் சமரவீர, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மூலமே தொற்று கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.