Header Ads

இலங்கையில் 600ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள்


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

பிபில மற்றம் அம்பாறை பகுதிகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 70 மற்றும் 47 வயதுகளையுடைய ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 588ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று உள்ளமை  உறுதியாகியுள்ள நிலையில், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 90 ஆயிரத்து 708 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 396 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

அதேவேளை கொரோனா தொற்று சந்தேகத்தில் 324 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.