புதுவருட தினத்தன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு
இலங்கையில் நேற்று புதுவருட தினத்தன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை குறித்த விபத்துக்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
கடந்த 24 மணி நேரத்துக்குள் 121 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மதுபானம் அருந்தி வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி முதல் கோவிட் பரவல் ஏற்பட்டிருந்த காலத்தில் நாட்டில் வீதி விபத்துக்கள் குறைந்திருந்தன.
மேலும், இந்த கால கட்டத்தில் நாட்டின் வளி மாசடைதலும் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments