இல் து பிரான்சுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட RER சேவை !!
இன்று மார்ச் 1, திங்கட்கிழமை முதல் இல் து பிரான்சுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட RER சேவைகளே இயக்கப்பட உள்ளன.
இல் து பிரான்சுக்குள் நிலவிவரும் கொரோனா தொற்று காரணமாக இந்த சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. Île-de-France Mobilités வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 10% வீதமான சேவைகள் குறைக்கப்படுவதாகவும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப சேவைகள் குறைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பயணிகள் வரத்து 50% வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக நெருக்கடியான வேலை நேரம் தவிர்த்து மீதமான பகல் நேரங்களில் தொடருந்துகள் தேவைக்கு அதிகமாக பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 7 ஆம், 13 ஆம் இலக்க சேவைகளும் RER B சேவைகளும் வழமைபோல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments