உள்ளிருப்பு சாத்தியமில்லை என பிரதமர் Jean Castex அறிவித்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இன்றைய ஊடக அறிவிப்பில், உள்ளிருப்பு தொடர்பாக பிரதமர் அறிவிப்பார் என எதிர்பாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இல் து பிரான்ஸ் மாகாணத்துக்கு முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால் பிரதமர் ஊரடங்கு சாத்தியமில்லை என அறிவித்துள்ளார். வார இறுதி நாட்களில் பா து கலேயிற்கு மாத்திரம் ஊரடங்கு (சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை ) நடைமுறையில் இருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
ஊடங்கினால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியினையும், மக்கள் மனங்களில் ஏற்படும் விளைவுகளையும் நாம் ஏற்கனவே சந்தித்தாயிற்று என பிரதமர் தெரிவித்தார்.
No comments