Header Ads

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் நாடு திரும்பினால் தனிமைப்படுத்தல் இல்லை – சுகாதார அமைச்சு



வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு அனுமதி வழங்குவதற்கான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் அவர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, தனிமைப்படுத்தல் செயன்முறைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதற்குரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இரண்டு முறை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களும் இரு வாரங்கள் தனிமைப்படுதலை நிறைவு செய்தவர்களும் விரைவில் இலங்கைக்கு வருகைதரமுடியும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களை இலங்கைக்கு வந்ததும் பி.சி.ஆர் சோதனைகளை அடுத்து வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்

No comments

Powered by Blogger.