சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் இன்று பேரணி!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி பேரணியாகச் சென்று, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நிறைவடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
No comments