இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா விலகியிருந்தமை தமிழர்களுக்குச் செய்த மாபெரும் துரோகம்- சிதம்பரம்
இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருப்பது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பா.ஜ.க. அரசு செய்த மாபெரும் துரோகம் மற்றும் மாபாதகச் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தச் செயல் ஒன்றே போதும் எனவும் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து எதிர்வரும் தேர்தலில் ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பச்சைத் துரோகத்திற்குத் தகுந்த தண்டனையைத் தமிழ்நாடு வழங்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ள அவர், வெளியறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும் எனந சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
No comments