Header Ads

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற மேற்குல நாடுகளால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை – அரசாங்கம்!


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்ள 47 உறுப்பு நாடுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அவர்களால் 22 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்ததாகவும் 25 வாக்குகளைப் பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

11 நாடுகள் வாக்களித்துள்ளன என்பதுடன், மேலும் 14 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன என சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள மேற்குலக நாடுகளினால் பெரும்பான்மையைப் பெறமுடியாமற் போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலனவர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகக செயற்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இதன்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சமாதானத்தை ஜனாதிபதி மேலும் வலுப்படுத்தியுள்ளார் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.