வாள்கள் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி தொடர்பாக விசாரணை செய்யுமாறு அறிவுறுத்தல்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுவிற்கு அமைய இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு குறித்த சந்தேகநபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
No comments