கொரோனா நோயாளிகளுடன் போராடி நாம் சோர்வடைந்துவிட்டோம் - பிரான்ஸ் மருத்துவர்கள்
கொரோனா நோயாளிகளுடன் போராடி நாம் சோர்வடைந்துவிட்டோம் என இல் து பிரான்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவும் மாகாணங்களில் இல் து பிரான்சே முதல் இடத்தில் உள்ளது. நோயாளிகளுக்கான சிகிச்சைகள் வழங்குவதில் தாம் தற்போது முழுமையாக சோர்வடைந்துள்ளதாகவும், மிக இறுக்கமான கட்டுப்பாடு ஒன்றினால் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் கோரியுள்ளனர்.
இல் து பிரான்சின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்களில் 72% வீதமானவை நிரப்பப்பட்டுள்ளன. தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது. <<கிட்டத்தட்ட நாம் மூழ்கிவிட்டோம்!>> என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இல் து பிரான்சுக்குள் இறுக்கமான கட்டுப்பாடு ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவருவதே சிறந்த வழி என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
No comments