மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது குறித்து அவதானம்!
மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனம், மதத்தின் அடிப்படையில் இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கான கால அவகாசத்தினை வழங்குவது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments