Header Ads

சர்வதேச மகளிர் தினம் இன்று!



ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின் போது பெரிஸில் உள்ள பெண்கள் போராட்டம் நடத்தினர்.

ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் போன்ற விடயங்களை அவர்கள் வலியுறுத்தினர்.

பிரான்ஸ் மன்னரின் மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்ட பெண்களை அச்சுறுத்திய இரண்டு காவலர்கள் பெண்களால் கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து பெண்கள் நடத்திய போராட்டத்தின் நிமித்தம், மன்னர் லூயிஸ் பிலிப் பதவியில் இருந்து விலகினார்.

இதனை அடுத்து பிரான்ஸ் பெண்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ஐரோப்பா முழுவதும் ஆதரவு பெருகியது. ஜேர்மன், ஆஸ்திரியா, டென்மார்க் இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து பிரான்ஸில் ஆட்சி அமைத்த லூயிஸ் பிளாங், பெண்களை அமைச்சரவை ஆலோசனை குழுவில் இணைத்ததுடன், அவர்களுக்கு வாக்குரிமை வழங்கவும் இணங்கினார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 1848 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி இடம்பெற்றது. அதன் பின்னர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இடம்பெற்ற பெண்களின் புரட்சிகளை கருத்தில் கொண்டு, மார்ச் மாதம் 8 ஆம் திகதியை சர்வதேச மகளிர்தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.

No comments

Powered by Blogger.