🔴 விசேட செய்தி : முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்றாண்டுகள் சிறை!
முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோசிக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
.jpg)
நீதிபதி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற காரணத்தினால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நீண்ட நாட்களாக நிக்கோலா சர்கோசி விசாரணைகளுக்கு உட்பட்டு வருகின்றார். இது தொடர்பான வழக்கினை Le parquet nationale financier (PNF) தொடுத்ததோடு மட்டுமில்லாமல் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கோரியிருந்தனர். இன்று திங்கட்கிழமை அவருக்கான இறுதி தீர்ப்பு வாசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை அவருக்கு மூன்றாண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளாதாகவும், சர்கோசி சட்டத்துக்கு விரோதமாக எவ்வித ஊழலையும் செய்யவில்லை எனவும் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஆறு வருடங்களுக்கு முன்னர் நிக்கோலா சர்கோசி தெரிவித்திருந்த கருத்து ஒன்று தற்போது மிக பரபரப்பாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி சர்கோசிக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு வருட சிறைத்தண்டனையை அவர் வீட்டில் இருந்தே அனுபவிக்கலாம் எனவும், மின்சார கைவிலங்கு ஒன்றை கைகளில் அணிந்திருந்தாலே போதுமானது என சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்கோசி கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், 2015 ஆம் ஆண்டில் இந்த சலுகையை எதிர்த்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார். 2015 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி அவர், <<சிறைத்தண்டனையில் இதுபோன்ற சலுகை வழங்குவதை நான் எதிர்க்கின்றேன்!>> என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அவரது அந்த கருத்தை மீண்டும் பகிர்ந்து, அதை வைத்து நகைச்சுசைகளையும், மீம்ஸ்களையும் உருவாக்கி வருகின்றனர்.
"பூமராங் போல் அவர் வீசிய கருத்து தற்போது அவருக்கு எதிராகவே வந்து நிற்கின்றது" எனவும், "ஜனாதிபதியின் கருத்துக்கு அமைய அவரை சிறையில் அடையுங்கள்!" எனவும் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
No comments