பரிஸ் உட்பட இல் து பிரான்சுக்கு முழு ஊரடங்கு - நாளை வெளியிடுவார் பிரதமர் !!
நாளை வியாழக்கிழமை பிரதமர் Jean Castex ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்கின்றார்.
நாளை மார்ச் 4 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது. இந்த சந்திப்பின் போது பிரதமர் கொரோனா வைரஸ் தொடர்பான புதிய தரவுகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தற்போது '20 மாவட்டங்களுக்கு தீவிர கண்காணிப்பு' நடவடிக்கை நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் பரிஸ் உட்பட இல் து பிரான்சுக்கு முழு ஊரடங்கு தேவை என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்திருந்தார். இதனை நிபந்தனைகளுடன் தாம் ஏற்றுக்கொள்வதாக மாகாண முதல்வரும் தெரிவித்திருந்தார்.
இந்த கோரிக்கையை பிரதமர் முதலில் மறுத்திருந்தாலும், இது தொடர்பான முக்கிய தகவலை/ அறிவிப்பை நாளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுள்ளது.
No comments